அமெரிக்காவின் ஆளுமைப் பெண்!
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி என்பதையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார் ஹிலாரி கிளிண்டன்.
வழக்கறிஞரான இவர் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்து, சிறப்பாகச் செயலாற்றி வருகிறார்.
2008ஆம் ஆண்டு இடம்பெற்றத் தேர்தலில் அதிபர் பதவிக்குப் போட்டியிட முயன்றவருக்கு, பராக் ஒபாமாவால் வாய்ப்பு நழுவிப்போனது.
ஒபாமாவின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. ஆக நவம்பர் 8 ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டுது. வேட்பாளர்கள் நாடு முழுதும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு ஆதரவு திரட்டிவருகிறார்கள்.
இந்த முறை அமெரிக்க அதிபர் ஆகிவிடும் தீர்க்கமான முடிவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் ஹிலாரி. எதிர்க்கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்பின் கோமாளித்தனமான கருத்துகளால், ஹிலாரிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்து வருகிறது. போரப்போக்கில் ஹிலாரி வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற சிறப்புக்குரியவராவார்.
முதல் பெண்மணியாக, பிரபலபெண்கள் வரிசையில் முன்னின்ற ஹிலாரி சிரித்த முகத்துடன் சற்றும் சளைக்காமல் சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். கணவரின் நல்லது, கெட்டது, அரசியல் வலைவு நெளிவு, வாழ்க்கையில் சறுக்கல் என அனைத்து சுகதுக்கங்களிலும் பக்கபலமாக இருந்தவர்.
ஹிலாரி சொந்த வாழ்க்கை, சட்ட சேவை, அரசியல் பிரவேசம் என அனைத்தையும் சரியாக திறம்பட கையாள்கிறார்.
வாய்ப்பு ஒரு முறைதான் கதவைத் தட்டும் என்பது ஹிலாரி விஷயத்தில் பொய்ப்பித்துவிட்டது. ஒவ்வொரு முறையும் அவர் வீழ்ந்தாலும் மரமாக சாய்ந்து அழிந்துவிடாமல் மீண்டும் மீண்டும் துளிர்விட்டு நிமிர்த்து நிற்கிறார்.
ஹிலாரியின் தற்போதைய உரைகள் தனித்துவம் பெற்றுள்ளன. வெற்றியை மட்டுமே குறி வைத்திருப்பது ஹிலாரியின் பேச்சில் தெரிகிறது.
நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஹிலாரி பாடசாலை காலம் முதல் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றல், வினாடிவிடை போட்டிகளில் ஆர்வம், குழந்தைகள் நலனுக்கான சேவைகளில் பங்கேற்றல், வகுப்புத் தலைமை, அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்றல் இப்படி தன்னைத் தானே தலைமைத்துவத்திற்காக ஒவ்வொரு செல்லாக செதுக்கிக்கொண்டுள்ளார்.
மேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற ஹிலாரி, சட்ட பத்திரிகை ஆசிரியர் குழுவிலும் அங்கம் வகித்துள்ளார். குழந்தைகள் நலன், குடும்ப நலனில் அதிக கவனம் கொண்ட ஹிலாரி படிக்கும் காலத்திலும் சரி விரிவுரையாளராக சேவை செய்யும் காலத்திலும் சரி மாற்றுத்திறனாளிகள் மீது தனி அக்கறை செலுத்தினார். இதனால் அவர்களுக்கான சட்டங்களையும், உதவித் திட்டங்களையும் உருவாக்கினார்.
ஹிலாரியின் பாடசாலை காலம், இளம் பராயம், கிளின்டனுடனான திருமண பந்தம், வழக்கறிஞர் இப்படி தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் சமூக சேவையுடனேயே கழிந்திருக்கிறது.
திருமணத்திற்குப் பின் கிளின்டனின் அரசியல் பிரவேசத்திற்கு அச்சானியாக இருந்ததும் ஹிலாரியே. இதற்குப் பின் சில காரணங்களால் விரிவுரையாளர் பணியை தொடர முடியாமல் போக அருகிலேயே உள்ள சட்ட நிறுவனங்களில் சேர முயற்சித்தார். பெண் என்பதால் அவருக்கான வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது. தடைகளை தகர்த்தெறிந்து அந்நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் ஹிலாரி. அங்கிருப்பவர்கள் ஹிலாரியை காட்சிப் பொருளாகவே பார்த்தனர். அவருடைய கண், முடி, நடை, உடை எல்லாம் கேலிக்குள்ளனது. நீதிமன்றம் சென்று வதாடும் வேலை கொடுக்கப்படவில்லை. முதன்முதல் இவருக்கு கொடுக்கப்பட்டது செத்த எலி வழக்கு. ஆனால் ஹிலாரி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வெற்றியை பெற்றார்.
இதற்குப் பின் கிளின்டன்-ஹிலாரி தம்பதிக்கு குழந்தை பிறந்தது. ஹிலாரிக்கு அரை சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்பட்டு அங்கும் அநீதி இழைக்கப்பட அதை எதிர்த்துப் போராடினார். இதன்மூலம் குடும்ப மற்றும் மருத்துவ விடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
இப்படி அதீத சமூக அக்கறைடன், மனித உரிமை மேம்பாடு போன்றவற்றை வாழ்நாள் இலட்சியாக செயற்பட்ட ஹிலாரிக்கு பாராட்டுகளுக்கும் பஞ்சமிருக்கவில்லை.
சமூகத்தின் நேரடிப் பார்வையில் இருப்பவர்கள் உயர உயர குற்றச்சாட்டுகளும் வந்திகளும், கிசுகிசுக்களும் அவர்களுடனேயே சேர்ந்து வளரத் தொடங்குகின்றன.
ஹிலாரி அமெரிக்க அரசாங்கத்தில் பதவி வகிக்கையில் அரசு விதிப்படி இணைய செய்திகள் அனுப்பும்போது அரசாங்க சேவரையே பயன்படுத்த வேண்டும். ஹிலாரி தனிப்பட்ட சேவரை பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவர் அரசாங்க இரகசியத்தை சேகரித்து வைத்துள்ளார் அல்லது ஏதோ தவறு செய்துள்ளார். அதை மறைக்கத்தான் தனிப்பட்ட சேவரை பயன்படுத்தி இருக்கிறார் என ஹிலாரியை விளக்கம் கேட்டு விவகாரமாக்கியுள்ளனர்.
இது ஒரு புறமிருக்க தற்போது சர்ச்சையை கிழப்பியுள்ளது 1975 இல் வொஷிங்டனில் இடம்பெற்ற பாலியல் வழக்கு. இவ்வழக்கை ஆதாரமாகக் கொண்டு அமெரிக்க ஊடகங்கள் ஹிலாரியை உரசிப்பார்க்கத் தொடங்கியுள்ளன. 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக தோமஸ் டைலர் என்பவர் கைதானர். அந்த வழக்கில் டைலருக்கு ஆதரவாக வாதாடியது வேறு யாருமல்ல ஹிலாரிதான். 1975 இல் ஹிலாரியின் விவாதம் அடங்கிய கேசட் இப்போது கிடைத்திருக்கிறது. இதை ஆதாரமாக வைத்தே பெண்களின் உரிமைப் போராளி என்று முலாம் பூசிக்கொண்டு பெண் கொடுமைக்கு எதிரான குற்றவாளிக்கு துணை போனவர் என தூற்றுகின்றனர்.
இதற்கும் மேல் ஹிலாரியும் கிளிண்டனும் கணவன் மனைவியே இல்லை. அவர்கள் பிசினஸ் பார்ட்னர்கள் என்று பிரபல எழுத்தாளர் ஒருவர் இன்னொரு வெடியை இப்போது வீசியுள்ளார்.
ஹிலாரியின் உடல் நிலை, வயது எல்லாவற்றையும் கேள்விக்குரியாக்கி கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து தான் அனுபவசாலி, இரும்பு மனுசி என மீண்டும் மீண்டும் நிருபித்துகொண்டிருக்கிறார்.
ஹிலாரியின் எண்ணம் தூற்றுபவர்களை சட்டையைப்பிடித்து உலுக்குவது அல்ல. அவரது இலக்கு அமெரிக்க அதிபர் நாற்காளி மீதே உள்ளது.
சக்கர சுழற்சி வாழ்க்கையில் ஒருவர் இத்தனை ஏற்ற இறக்கங்களை சந்திக்க முடியுமா என்று எல்லோரையும் வியக்க வைக்கும் ஹிலாரிக்கு அமெரிக்காவின் வருங்கால அதிபர் அந்தஸ்த்து கிடைக்கும் என்கிறது கருத்துக்கணிப்பு. இதையே சமூகமும் எதிர்பார்க்கிறது. அமெரிக்காவின் மாற்றம், புதிய சட்ட உருவாக்கத்திற்கு ஹிலாரி அமெரிக்க அதிபராக புது அவதாரம் எடுக்கும் காலம் தொலைவில் இல்லை.
No comments:
Post a Comment