குழுந்தைகளைத் தாக்கும்
Coxsackie வைரஸ்!
மாதம் ஒரு புது வரவு மருத்துவத் துறைக்கு சவால் விடுக்கின்றது.
இந்நிலையில் இலங்கையில் அண்மைய சில நாட்களாக வாய், கால், கைகளில் கொப்புளங்கள் ஏற்பட்டு புதுவித நோய்யொன்று குழந்தைகளைத் தாக்கத் தொடங்கியுள்ளது. இது குழந்தைகள் மத்தியில் வேகமாக பரவிவந்தாலும் பாராதூரமான விளைவை ஏற்படுத்தக் கூடியது அல்ல. மருந்து மாத்திரைகள் இன்றி குணப்படுத்தக்கூடியது என்பது இப்போதைக்கு நிம்மதி.
நமக்கு இது புதிய நோய் என்றாலும் ஏற்கனவே பல நாடுகளில் இந்த நோய்த் தொற்று காணப்படுகின்றது. கிட்டத்தட்ட சின்னம்மை போன்று இருந்தாலும் இது அம்மை நோய் அல்ல. பயப்பட வேண்டியதில்லை என்கிறார் தேசமானிய வைத்திய நிபுணரும், சுகாதார அமைச்சின் மாகாண ஆலோசகருமான கிர்ஷாந்தன்.
இது ஒருவித வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகின்றது. அதிகரிக்கும் வெப்பம் காலநிலை மாற்றம் என்பவற்றால் இதன் தாக்கம் அதிகரித்திருக்கின்றதே தவிர இது எமக்குத் தெரியாத நோயொன்றும் அல்ல.
Coxsackie virus என்ற வைரஸால் தொற்றால் இந்நோய் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட போலியோ நோயை ஏற்படுத்தும் கிருமியை ஒத்தது. ஆனால் அத்தகைய பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. கொப்பளிப்பான் (Chicken pox) போன்று மெல்லிய நீர்க் கொப்பளங்களாக இல்லாமல் சற்று மஞ்சள் நிறமாக ஓரளவு தடித்தவை. இதை கை, கால், வாய்ப்புண் நோய் எனலாம்? (Hand Foot and Mouth Disease)
பெரும்பாலும் 2-6 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளையே இந்த நோய் தாக்குகிறது. குழந்தைகள் அத்தனை வலிமையானவர்கள் அல்ல. அவர்களின் பலவீனமே இதற்கு காரணம்.
சாதாரணமாக உடல் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும் போது கழிவுகள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். வியர்வை, சிறுநீர், மலம் சரியான முறையில் வெளியேற்றப்படாவிட்டால் உடல் வெப்ப நிலை மேலும் அதிகரிக்கும். ஏதோவொரு வகையில் வெப்பத்தை வெளியேற்ற
வேண்டியுள்ளது. இதனாலேயே இந்தக் கொப்புளங்கள் தோன்றுகின்றன.
இந்தநோய் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு இலகுவில் தொற்றக்கூடியது. ஆக நோய்த் தொற்றுக்குள்ளான குழந்தைகளை தனிமையில் வைத்திருப்பது நல்லது. நோய் குணமடையும் வரை பாடசாலைகளுக்கு விடுப்பு கொடுங்கள்.
வாயைச் சுற்றி கொப்புளங்கள் ஏற்படுவதோடு, வாயிலும் புண் வரும். கை, கால்களிலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படும். லேசான காய்ச்சல் அல்லது அதிக காய்ச்சல் இருக்கும். வாயில் புண் இருப்பதால் எரிச்சல் ஏற்படும். அதனால் கார உணவுகளை தவிர்க்க வேண்டும். திரவ உணவுகளே சிறந்தவை. உடலை குளிர்மையடையச் செய்யும் உணவுகளை கொடுக்க வேண்டும்.
அம்மை நோயை குணப்படுத்த வாழை இலை படுக்கை, வேப்ப இலை பயன்படுத்துவதைப் போன்று வேப்ப இலை, பச்சை மஞ்சள், மரமஞ்சள் கட்டை எல்லாவற்றையும் அவித்து குடிக்கக் கொடுக்கலாம். வாசனை மிக்க சவர்க்காரங்களை தவிர்த்து அன்டிபயோடிக் சவர்க்காரங்களை பாவிப்பது நல்லது. உடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
மேலும் பாஸ்புட், கோதுமை உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. மருந்து கொடுப்பதால் மேலும் வெப்பம் கூடுமே தவிர, குணமடையாது. ஆக பிரத்தியேக தடுப்பு மருந்து ஏதும் தேவையில்லை. சரியாக ஒரு வாரத்தில் தானாகவே குணமாகிவிடும்.
No comments:
Post a Comment