மீண்டும் அகதி வாழ்க்கை வேண்டாமே...!
தமிழகத்தில்
100 இற்கும்
மேற்பட்ட முகாம்களில் சுமார்
60
ஆயிரத்திற்கும்
மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள்
அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
பல காலகட்ட
இடம்பெயர்வுகளால் சென்றவர்கள்
பலருக்கு நாம் ஏன் இங்கு
இருக்கிறோம் என்பதே தெரியாத
நிலைமை.
இன்னும்
சிலர் சொந்த மண்ணின் வாசனை
அறியாதவர்கள்.
முப்பதாண்டுகால
யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி
வைக்கப்பட்டதன் பின் தமிழகத்தில்
அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள
எம் உறவுகள் மீண்டும் தாயகம்
திரும்புவதற்கான சாத்தியங்கள்
குறித்து சிந்திக்க ஆரம்பித்தார்கள்.
சிலர்
திரும்பி வந்துள்ளனர்.
மேலும்
சிலர் திரும்பி வரவிரும்பினாலும்
இங்கு வந்து என்ன செய்வது
என்று தெரியாமல் தவிக்கின்றனர்.
சிறு
வயதில் சென்றவர்கள் இன்று
வளர்ந்து திருமணம் முடித்து
பிள்ளைகளையும் பெற்றுவிட்டார்கள்.
இவர்களில்
சிலர் திரும்பிவர விரும்பினாலும்
வளர்ந்து அங்கேயே வேர்விட்ட
இளைய சமூகத்தினர் மீண்டும்
நாடு திரும்ப விரும்பாத
நிலையும் காணப்படுகின்றது.
இந்நிலையில்
அவர்களை மீண்டும் இலங்கைக்கு
அழைத்து வருவது தொடர்பில்
இலங்கை -
இந்தியா
இடையில் பல கட்டப் பேச்சுவார்த்தைகள்
நடத்தப்பட்டு வருகின்றது.
தஞ்சம்
புகுந்தவர்களை திருப்பி
அனுப்பும் அதிகாரம் இல்லையென்றபோதும்
அவர்களின் விருப்பத்தின்
பேரில் அனுப்பி வைப்பது
குறித்து இரு நாடுகளும்
ஆராய்ந்து வருகின்றன.
அத்தோடு,
இந்திய
மத்திய,
மாநில
அரசும் இவ்விடயம் தொடர்பில்
கவனம் செலுத்தியுள்ளன.
இதற்கிடையில்
அவர்களை வைத்து அரசியல்
பிழைப்பு நடத்தும் சிலர் பல
கருத்துக்களையும்
கேள்விகளையும் முன்வைத்து
வருகின்றனர்.
இந்நிலையில்
உண்மையிலேயே அவர்கள் நிலை
என்ன?
நாடு
திரும்புவதை விரும்புகிறார்களா?
இங்கு
வந்து அவர்கள் என்ன
செய்யப்போகிறார்கள்?
இப்படியான
பல கேள்விகளுக்கு விடை தேடும்
வகையில் அப்துல்லா புறம்
ஈழத்தமிழர் முகாம் மக்களை
தொடர்பு கொண்டோம்.
தாய்
நாட்டை விட்டுட்டு எப்படி
அந்நிய நாட்டில் வாழ்வது?
ஒன்பது
வயதில் இங்கு வந்தேன்.
இப்போது
என் பிள்ளைகளுக்கு எட்டு
வயதாகிவிட்டது.
என்னுடைய
மனைவி திருகோணமலையைச்
சேர்ந்தவர்.
எங்கள்
சொந்தங்கள் இன்னும் அங்கு
வாழ்கிறார்கள்.
அவர்களை
நாங்கள் பார்க்க வேண்டும். இலங்கையிலேயே
பிறந்து வளர்ந்தவர்கள்
மட்டும்தான் தாய்நாட்டைப்
பார்க்க வேண்டும் என்ற ஆசையில்
இருக்கிறார்கள்.
இந்த
முகாமில் சுமார் 320
குடும்பங்கள்
வாழ்கின்றனர்.
இதில்
100 குடும்பங்கள்
மட்டுமே மீண்டும் இலங்கை வர
விரும்புகின்றனர்.
இங்கேயே
பிறந்து வளர்ந்த இளைய
சமுதாயத்திற்கு இந்த சூழல்
பிடித்து விட்டது.
இன்னும்
சொல்வதானால் இங்கு கிடைக்கும்
கல்வி,
தொழில்
வாய்ப்பு அங்கு கிடைக்குமா
என்ற சந்தேகம் அவர்களிடத்தில்
மேலோங்கி இருக்கின்றது.
என்னுடைய
எண்ணப்படி என் பிள்ளைகளை
நல்ல முறையில் வளர்க்க
வேண்டுமானால் இலங்கைக்கு
வர வேண்டும்.
எப்படியும்
என் மூத்த மகனுக்கு 12
வயது
வருவதற்குள் தாய்நாட்டிற்கு
வந்துவிட வேண்டும் என்கிறார்
முகாம் தலைவர் செல்வரத்தினம்.
இம்முகாமின்
மகளிர் குழு உறுப்பினர்
நந்தகுமாரி (32வயது)
குறிப்பிடுகையில்;
சொந்த
மண்ணில வாழும் சுகமே தனி.
பிறந்த
மண்ணுக்கு வர யாருக்குத்தான்
விருப்பம் இல்லை.
இருந்தாலும்,
கொஞ்சம்
பயமும் இருக்கிறது.
இங்கு
அகதிகள் என்ற அடையாளத்துடனே
வாழ்கின்றோம்.
கட்டின
உடுப்போடு இங்கு வந்து
கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில
பொருட்களெல்லாம் சேர்த்து
வச்சிருக்கிறோம்.
மறுபடியும்
அங்கு வந்தால் இதையெல்லாம்
கொண்டுவர முடியாது.
இங்கு
இன்னமும் குடியுரிமை இல்லை.
ஆனால்
பயமில்லாமல் இருக்கின்றோம்.
வீட்டை
விட்டு தைரியமாக வெளியேறுகின்றோம்.
தினமும்
செத்துச் செத்து பிழைக்க
வேண்டிய தேவையில்லை.
வாழ்க்கை
முழுவதும் அகதிகளாக வாழ்வதற்கு
எங்களுக்கு தைரியம் இல்லை.
சரோஜா
(47வயது)
குறிப்பிடுகையில்;
2007ஆம்
ஆண்டு கையில் கிடைத்ததை
எடுத்துக் கொண்டு பிள்ளைகளுடன்
இங்கு தஞ்சமடைந்தோம்.
இன்று
என் கணவர் இறந்து 18
நாட்கள்தான்
ஆகிறது.
அவரது
உடலைக்கூட சொந்த மண்ணில்
அடக்கம் செய்ய முடியவில்லை.
எனக்கு
8 பிள்ளைகள்.
அத்தனையும்
ஆண்கள்.
அவர்களைப்
பற்றி நான் சிந்திக்க வேண்டும்.
எங்களுடைய
நிலைமை அவர்களுக்கு வரக்கூடாது.
அங்கு
வந்து மறுபடியும் அள்ளிக் கட்டிக்கொண்டு
அகதியாகும் நிலை எங்கள்
பிள்ளைகளுக்கும் வேண்டாம்.
இங்கு
அரசாங்கம் உதவிகளை வழங்குகின்றது.
வெளியில
போறதென்றால் அனுமதி எடுத்துக்கிட்டு
போகலாம்.
சொந்த
வீடு,
சொத்து,
நிலபுலம்
இல்லாவிட்டாலும் நிம்மதியா
படுத்து எழும்புறோம்.
இதுவே
எங்களுக்கு போதும்.
முகாம்
வாழ்க்கை பழகிப்போன ஒன்றாக
இருந்தாலும்,
அங்கு
நிலபுலத்துடன் வாழ்க்கை
நடத்தியவர்களுக்கு 16x10,
16x20
என்ற
ரீதியில் அமைந்த சமையலறை,
வராந்தா
என்று அடைந்த வாழ்க்கை
வாழ்கின்றனர்.
கதவைத்
திறந்தால் அடுத்தவர் வீட்டிலேயே
விழிக்க
வேண்டியுள்ளது.
எங்களுடைய
கலாசாரம் இங்கு மறைந்து
போய்க்கொண்டிருக்கின்றது
என்ற ஆதங்கம் இம் மக்களிடத்தில்
மேலோங்கி இருக்கின்றது.
அதேநேரம்
நூற்றுக்கு பத்து வீதமானவர்கள்
நாடு திரும்ப விரும்பினாலும்,
மீதமுள்ள
90 வீதமானவர்கள்
விரும்பவில்லை.
பெரும்பாலானவர்கள்
குடியுரிமை கிடைத்தால் இங்கேயே
வாழ்ந்து விடலாம் என்ற
எண்ணத்திலேயே இருக்கின்றனர்.
அத்தோடு,
பிள்ளைகளின்
கல்வி எதிர்காலம் குறித்து
அதிக கரிசனையுடன் இருப்பதை
காணமுடிகின்றது.
அண்மையில்
இந்தியாவிற்கு விஜயம்
மேற்கொண்டிருந்த வெளிவிவகார
அமைச்சர் மங்கள சமரவீர
இலங்கையில் நிலையான அமைதியும்
நல்லிணக்கமும் ஏற்படுவதற்கான
உறுதியான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இனியும்
இலங்கைத் தமிழ் அகதிகளை
இந்தியா வைத்துப் பராமரிக்க வேண்டிய
அவசியம் இல்லை.
அவர்கள்
தாயகம் திரும்பும் பட்சத்தில்
அவர்களுக்கு சகல விதமான
வசதிகளையும் வழங்கிக்
குடியமர்த்துவதற்கு தயாராக
உள்ளோம்.
எனவே,
அகதிகளைத்
தாராளமாகத் திருப்பியனுப்பலாம்
என இந்திய அரசுக்கு
உறுதியளித்துள்ளார்.
எது
எப்படியோ மீண்டும் தாயகம்
திரும்ப நினைக்கும் இம்மக்களின்
எதிர்பார்ப்புகளையும்
அபிலாஷைகளையும் அரசு நிச்சயம்
நிறைவேற்ற
வேண்டும்.
தமது
சொந்த மண்ணில் நிம்மதியாக
வாழ முடியும் என்ற நம்பிக்கையை
இலங்கை மண்ணில் கால் பதிக்கும்
அம்மக்களுக்கு வழங்க வேண்டும்
என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment