ட்ரிப் போறீங்களா?
இதையெல்லாம் பிளான் பண்ணுங்க!
இது பண்டிகை காலம். பாடசாலைகளுக்கு விடுமுறை. மேலதிக வகுப்புகள் கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறது. எல்லோரும் ஒன்று கூடினால்... அடுத்தது என்ன சுற்றுலாதானே!
ஒவ்வொரு பயணமும் புதிதாக ஏதாவது ஒன்றை தெரிந்து கொள்வதாக இருக்கனும். பயணம் சந்தோஷமானதாக மறக்க முடியாத இனிய அனுபவமா இருக்கனும். அதுக்கு பிளான் ரொம்ப முக்கியம். எந்த விசயத்தையும் பிளாண் பண்ணி பண்ணுறதுதான் ரொம்ப முக்கியம். ஆக வீட்டில் இருந்து கிளம்பியது முதல் திரும்பி வீடு வந்து சேரும் வரை ச்த் பிளான் முக்கியம்.
முதல்ல ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து ஒரு இடத்தை முடிவு பண்ணுங்க. இது கோடை காலம் என்பதால் அதற்கேற்ற பிரதேசங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. வெறுமனே ஜாலிக்காக மட்டும் இல்லாம கொஞ்சம் யூஸ்புல்லாவும் இந்த ட்ரிப் அமையிறமாதிரி இடத்தை தேர்ந்தெடுங்க. குறிப்பாக வீட்டில குழந்தைகள் சிறுவர்கள் இருந்தா அவங்களுக்கு பொருத்தமான பயனுள்ள இடத்தை தெரிவு செய்யுங்க.
அந்த இடத்தைப் பற்றி முழுமையா இல்லாட்டியும் கொஞ்சம் சரி தெரிஞ்சி வச்சிக்கோங்க. அல்லது அங்க இருக்கிற யாரையாவது தொடர்புல வச்சிக்கோங்க. அதுவும் இல்லையென்றால் அந்த இடம் பற்றி தெரிந்தவர்களை கூட்டிச் செல்வது பெஸ்ட் சொய்ஸ்.
இடத்தை முடிவு பண்ணினதோட எப்படி போக போறோம் என்பதையும் தீர்மானிங்க. வாடகைக்கு வாகனம் எடுத்து போகப் போகிறோமா? அல்லது பொது போக்குவரத்தை பயன்படுத்தப் போகிறோமா? என்பதை முடிவு பண்ணுங்க.
பொது போக்குவரத்து என்றால் எப்படியான வாகனத்தை பயன்படுத்துவது? எத்தனை மணிநேர பயணம்? கட்டணம்? எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை வாகனம் இருக்கிறது போன்ற விடயங்களை அறிந்து கொண்டால் பயணம் செய்வது இலகுவாக இருக்கும்.
சொந்த வாகனம் அல்லது வாடகை வாகனமாக இருந்தால் வாகனத்துக்கான ஆவணங்கள், டயர், வாகனத்தின் கண்டிஷன், எங்கே நிறுத்துவது என்பதையெல்லாம் தீர்மானித்துக்கொண்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பாடுவதை தவிர்க்கலாம்.
போகுமிடத்தில் எங்கு தங்கலாம்? நல்ல உணவு எங்கு கிடைக்கும்? குடிநீர் வசதி போன்ற விடயங்களை தேடி வைத்துக் கொண்டால் நேரமும் மிச்சம். ஒவ்வாமை, நோய்த் தொற்றிலிருந்து குழந்தைகளையும் உங்களையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
குழந்தைகளை கொண்டு செல்பவர்கள் அவர்களுக்குத் தேவையான உடை, பால்மா, மருந்து வகைகள், பெம்பஸ் என அனைத்தையும் எடுத்து வைப்பது நல்லது. போகுமிடத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணமே வேண்டாம்.
குளிர்ச்சியான இடங்களுக்கு செல்பவர்கள் கோடைகாலம்தானே ஜேசி, தொப்பி, சப்பாத்து தேவையில்லை என்று எண்ணத்தோன்றும். மாலைவேளையில் குளிர் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அவற்றையெல்லாம் கையோடு கொண்டுசெல்வதே புத்திசாலித்தனம்.
திட்டமிட்டபடி தேவைக்கு மட்டும் பணம், உடைகளை கொண்டுசெல்லாது ஒரு செட்டை அதிகமாக எடுத்துச் செல்லுங்கள். ஒருவேளை ஏதேனும் தடைகள், அல்லது மேலதிகமாக ஒருநாள் தங்க நேரிட்டாலோ சமாளிக்க உதவியாக இருக்கும்.
காலநிலை மாற்றம் இடத்துக்கு இடம் வேறுபடும். முதலுதவி பொருட்களை எடுத்துச் செல்லுங்கள். போகுமிடத்தில் தலைவலி, வயிற்றுவலி ஏன் தற்செயலாக காயம் ஏற்பட்டாலோ உதவும். உங்களுக்கு மட்டுமல்ல உடன் வருபவர்களுக்குகூட பயன்படும்.
சுற்றுலா போகும் ஒவ்வொருவருக்கும் ஏமாந்த அனுபவம் ஒன்றாவது இருக்கும். நிச்சயம் ஒருமுறையாவது ஏமாந்திருப்பார்கள். ஆனால் அவரவர்க்கேற்ப அனுபவங்கள் வேண்டுமானால் மாறுபடலாம். சன கூட்டம், நெறிசல் மிக்க பகுதிகளில் அவதானமாக இருங்கள். உங்களை ஏமாற்ற காத்துக் கொண்டிருக்கும் கழுகுகளிடம் ஜாக்கிரதையாக இருக்கப் பாருங்கள்.
எல்லா பணத்தையும் ஒருவரே வைத்து செலவு செய்யாதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து வையுங்கள். தற்செயலாக ஒருவருடைய பை தொலைந்தாலும் இன்னுமொருவரிடம் உள்ள பணத்தை வைத்து சமாளிக்கலாம்.
அத்தோடு முக்கியமான ஆவணங்கள், பத்திரங்களை பையில் கொண்டு திரியாதீர்கள். ஒருவேளை தொலைந்துபோனால் திரும்பி வந்ததும் படாதபாடு படவேண்டியிருக்கும்.
எத்தனை வருடங்கள் கழிந்தாலும் நான் இந்த இடத்திற்கு போனேன் என்பதை உறுதிப்படுத்துவது புகைப்படங்கள் மட்டுமே. அவற்றை எடுக்க மறக்காதீர்கள். உறவுகளுக்குள் மனஸ்தாபங்கள், விரிசல் ஏற்பட்டாலும் இந்தப் புகைப்படங்கள் நீங்கள் சேர்ந்திருந்த சந்தோஷமான தருணங்களை உங்களுக்கு ஞாபகப்படுத்தும்.
இப்படி எல்லாவற்றையும் பிளான் பண்ணி பண்ணுனீங்கனா உங்களுக்கு இந்த விடுமுறை ட்ரிப் கொண்டாட்டம்தான்!
No comments:
Post a Comment