பாடசாலை வேன்கள் பாதுகாப்பானதா?
இலங்கையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படல், வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செயப்படல், அச்சுறுத்தப்படல் மற்றும் சிறுவர் உரிமைகள் பல்வேறு வகைகளிலும் மீறப்படல் என்று கவலை தரும் விடயங்கள் தொடர்கதையாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
பாடசாலை செல்லும் வழியிலும், போக்குவரத்து வாகனங்களிலும் தான் சிறுவர்கள் பெருமளவு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அந்த நிலைமையை மாற்றுவதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளது.
சிறுவர்கள் வேன்களில் சென்று வரும் சந்தர்ப்பங்களில் வேன் சாரதியினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். இது தொடர்பில் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளதுடன் அதனை தடுப்பதற்காக வேலைத்திட்டங்களை உடனடியாக அமுல்படுத்துமாறு உள்நாட்டு போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் நடாஷா பாலேந்திரன் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அறிக்கை இல்லாமல் பாடசாலை வேன் சேவைகளில் ஈடுபடும் வேன்களுக்கு சாரதிகளை இணைத்துக்கொள்வதை தவிர்ப்பதற்கான வேலைத்திட்டமொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும் தடுப்பதற்காக பாடசாலை அதிபர்,ஆசிரியர்,பெற்றோர் மற்றும் வேன் சாரதிகளை இணைத்து வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு பெண் பராமரிப்பாளர் ஒருவருடன் சிறுவர்களை வேனில் ஏற்றிச்செல்லும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னேடுக்கவேண்டும் எனவும் போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவித்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெற்றோர்களும் இந்த பாடசாலை போக்குவரத்து வாகனங்கள் கறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும். பிள்ளை செல்லும் பாடசாலை வேன் சரியான தரத்தில் உள்ளதா, எத்தனை குழந்தைகளை ஏற்றி செல்கிறார்கள், பொலிஸ் அறிக்கை பெற்றதா என அறிவதுடன் சாரதி தொடர்பில் தேடிப்பாருங்கள். இவற்றை தேடிபார்த்து உங்களுக்கு சரி என்று தோன்றினால் மட்டும் உங்கள் பிள்ளையை பாடசாலை வேனில் செல்ல அனுமதியுங்கள். பாடசாலை விடும் நேரம் பிள்ளைகள் வீட்டிற்கு வரும் நேரம் என்பதை அவதானித்துக்கொள்ளுங்கள். ஒரு நாள் நேரம் தாமதித்து வந்தாலும் அதற்கு என்ன காரணம் என்று சாரதியிடம் கேட்டு அறிந்துக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment