Wednesday, April 27, 2016

பாலியல் உறவுக்கு மறுத்த பெண்களுக்கு மரண தண்டனை



ISIS தீவிரவாதிகளின் கொடூரம்! 



 மசகு எண்ணெய் விற்பனையில் பெயர் பெற்ற நாடு ஈராக். ஆனால் இன்று மக்களை கொத்துக் கொத்தாக கொன்று குவிப்பதிலும், தலையை வெட்டி வீழ்த்துவதிலும், பெண்களை அடிமைப்படுத்தி அனுவனுவாய் சித்திரவதை செய்வதிலும் அதன் பெயர் அதிகமாய் அடிபடுகிறது.
இங்கேபெட்றோல் பீப்பாக்கள் விற்கப்படுவது போன்று பெண்கள் விற்கப்படுகின்றனர். ஆடு மாடுகளைக் கூட இப்படி விற்பனை செய்து பார்த்தில்லை. வயது வாரியாக பிரித்து பிரைஸ் டேக் வழங்கியுள்ளனர் என சர்வதே இணையத்தளம் ஒன்று இங்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி விபரிக்கிறது.

ஈராக்கில் பெரும் பகுதியை கைப்பற்றி உலகளவில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாதிகளே அங்குள்ள சிறுபான்மை பெண்களையும், சிறுமிகளையும் இவ்வாறு துன்பத்தில் புழுவாய் துடிக்கச் செய்துள்ளனர்.

மரண தண்டனை கைதிகளுக்கு வாழ்வில் ஒரு முறைதான் தூக்கு. ஆனால் இந்தப் பெண்களுக்கு தினம் தினம் தூக்கு தண்டனைதான்.
பிணைக் கைதிகளாக இருக்கும் பெண்களுக்கு விலைப்பட்டியல் நிர்ணயித்து அவர்களை ஆடு, மாடுகளைப் போன்று சந்தைகளில் விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில் வயது வாரியாக யாஸிதி மற்றும் கிறித்துவ பெண்களுக்கு இவர்கள் நிர்ணயித்துள்ள விலைப்பட்டியலில் இவ்வாறு அமைகின்றது.
40 முதல் 50 வயது வரை -   43 அமெரிக்க டொலர்
30 முதல் 40 வயது வரை -   75 அமெரிக்க டொலர்
20 முதல் 30 வயது வரை -   86 அமெரிக்க டொலர்
10 முதல் 20 வயது வரை - 130 அமெரிக்க டொலர்
01 முதல் 09 வயது வரை - 172 அமெரிக்க டொலர்
இப்படி வயது வாரியாக பிரித்து வயது குறையக் குறைய விலை ஏற்றம் காண்கிறது.

 ஒருவர் மூன்று பெண்களுக்கு மேல் வாங்க அனுமதியில்லை. ஆனால், இதில் துருக்கி, சிரியா மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவருக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. இவ்வாறு விற்கப்படும் பெண் ஒருவரை 6 வெவ்வேறு ஆண்கள் வாங்க முடியும்.

ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாதிகள் என்ன நோக்கத்தோடு, கொள்கையோடு இந்த அமைப்பை உருவாக்கினார்ளோ என்னவோ இன்று ஒட்டுமொத்த அராஜகத்தின் விம்பமாக நிற்கின்றனர். இவர்களின் அத்து மீறல்கள் எல்லைகளற்று கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இந்த பாவிகளிடத்திலிருந்து விமோசனமே இல்லையா? என்ற கேள்வி உலக பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பெண்களை வெறும் போகப்பொருளாக பார்க்கும் இவர்களிடத்தில் மனித நேயத்தை எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் 1 வயது குழந்தைகூட இவர்கள் கண்ணுக்கு ஒரு பெண்ணாக மட்டுமே தெரிவது ஒட்டுமொத்த மனித குலமும் வெற்கித் தலைகுனிய வேண்டியுள்ளது.

இதேவேளை புனித ரம்லானை முன்னிட்டு ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாதிகள் குர் ஆன் மனப்பாட போட்டிகளை நடத்தினர். அதில் வெற்றிபெறுபவர்களுக்கு யஷ்டி இன பெண்களை முதல் பரிசாக அறிவித்தனர் என்ற தகவல் இஸ்லாமிய உலகிற்கு அதிர்ச்சியான செய்தி.

இதன்படி சிரியாவில் நடைபெற்ற குர்ஆன் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு சபயா என்ற பெண் பரிசாக வழங்கப்பட்டார்.

மேலும் அண்மையில் பாலியலுக்கு மறுத்த 19 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இப்படி ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆயிரமாயிரம் பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வருகின்றனர். சந்தையில் ஆடு, மாடுகளைப் போன்று விற்கப்படுகின்றனர். இதன் உச்ச கட்டமே இந்த விலை நிர்ணயம்.

உலக நாடுகள் இத்தனை கொடுமைகளையும் சகித்துக் கொண்டு இருப்பது எதற்காக? தினம் தினம் நரக வேதனையில் புழுவாய் துடிக்கும் அந்தப் பெண்கள் செய்த பாவம் என்ன? பெண்ணாய்ப் பிறந்ததுதான் பாவமா?
ஆண் பெண் என்பதையும் தாண்டி மனசாட்சியுள்ள மனிதனாக சிந்தியுங்கள். இந்தக் கொடூரர்களின் கொடுமையின் விமோசனத்திற்காக இவ்வுலகம் எப்போது வெகுண்டெழப் போகிறது?

No comments:

Post a Comment