இந்திய ரசிகர்களின் எக்ஸ்ட்ரீம் அன்பு!
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தைதாறுமாறாக கொண்டாடி கண்டனங்களை வாங்கிக் கட்டிக்கொண்ட தமிழகத்து மக்கள் இப்போது ஒரு பிரபலத்தின் மகன் என்ற காரணத்திற்காக ஒரு வயது குழந்தையை கடவுளின் ஸ்தானத்தில் வைத்து பிறந்தநாள் கொண்டாடி தமிழன் ஏன் இப்படியிருக்கிறான் என்ற கேள்வியை எல்லோர் மனதிலும் எழுப்பியிருக்கிறார்கள்.
நடிகர் அஜித், அனைவருக்கும் பிரியமான நடிகர். அஜித்தின் திரைப்படங்களுக்காக திரையரங்கையே இரண்டு பண்ணுவார்கள் அவரது ரசிகர்கள், ரசிகர்கள் தல, அண்ணா என அன்போடு அழைத்து தன் வீட்டில் ஒருவராக பாவித்து அவரது பிறந்தநாளை ஆளுயர கட்டவுட்டுகள், பேனர்கள், வாணவேடிக்கை, பாலாபிஷேகங்கள் என அமர்க்களப்படுத்துவார்கள்.
இப்போது அவரது மகன் ஆத்விக்கின் முதலாவது பிறந்ததினத்தையும் அமர்க்களமாக கொண்டாடியிருக்கிறார்கள்.
மார்ச் 2 ஆத்விக் அஜித்குமார் பிறந்தநாள். அஜித் குடும்பத்தோடு அமைதியாக வீட்டிலேயே பிறந்தநாள் கொண்டாட தல ரசிகர் பட்டாளமோ ஆளுயரக்கட் அவுட் வைத்து, ஆத்விக்கையும் அஜித்தையும் கடவுள் போல சித்தரித்து பாலாபிஷேகம் செய்து அதகளப்படுத்தியிருக்கின்றனர்.
நடிகர் அஜித் தன் சுயநலத்திற்காக ரசிகர்களை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர். அதேபோல் தன்னுடைய திரைவாழ்வும் சரி, பொது சேவையும் சரி தன் குடும்பத்தை எவ்வகையிலும் பாதிக்கக் கூடாது, தன் குடும்பத்திற்கு சுமையாக அமையக்கூடாது என்பதில் குறியாக இருப்பவர்.
குடியிருப்பு முதற்கொண்டு தனக்குத்தானே ஏகப்பட்ட இறுக்கங்களை கடைப்பிடிக்கும் அஜித்திற்கு நிச்சயம் இது
சங்கடத்தையே தரும்.
ரசிகர்கர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தன்னால் இடைஞ்சல் இருக்கக்கூடாது என்றவரின் குடும்பத்தை விட்டுவைக்காமல் துரத்துகிறது அவரது ரசிகர் பட்டாளம்.
திரைப்படங்களை பார்க்கின்றோம், பிடித்த ஹீரோக்களின் நடிப்பை பாராட்டுகின்றோம் அல்லது திட்டுகின்றோம். இதற்கும் ஒருபடி மேலே போய் அவர்களுக்கு விழா எடுப்பதுகூட பரவாயில்லை. ஆனால், அவர்கள் குடும்பத்தையுமா தெருவுக்கு இழுத்து தோரணம் கட்ட வேண்டும்?
அதிலும் ஆத்விக் ஒரு வயது குழந்தை. அஜித்தின் மகன் என்பதைத் தவிர ஆத்விக் செய்தது என்ன? வருங்காலத்தில் ஆத்விக் ஒரு பிரபலமாகலாம். ஆனால், தந்தை போலவே வருவார் என்று எப்படிச் சொல்ல முடியும். குழந்தைகளின் புகைப்படங்களை பிரசுரிப்பது கூடாது என்ற சட்டம் உலகளவில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ஆத்விக்கின் உருவம் போஸ்டர்களாக காட்சியளிக்கிறது.
ஒன்றுமறியா குழந்தைக்கு ஆளுயர கட்அவுட், மெகா சைஸ் போஸ்டர், அன்னதானம், தங்கமகன், குட்டித்தல பட்டம், கிங்
வேஷம் எல்லாம் கொஞ்சம் அல்ல ரொம்பவே ஓவர்தான்.
No comments:
Post a Comment