கந்தப்பளை கொடூரம் ...
கந்தப்பளை சிறுமி பாலியல் வல்லுறவு வழக்கு குற்றவாளிகளுக்கு வழங்கப்போகும் தீர்ப்பு ஒன்றே அப்பகுதியில் மட்டுமல்ல நாடு முழுதும் பாலியல் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளின் ஆராத ரணத்திற்கு சற்று ஆறுதலாக இருக்கும்.
தேர்த்திருவிழாவிற்கு சென்ற 16 வயது சிறுமி மறுநாள் வாழைத் தோப்புக்குள் கிழிந்த நாராகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெண் பிள்ளைகளைப் பெற்ற அத்தனை பெற்றோரையும் நிலைகுலையச் செய்துள்ளது.
கந்தப்பளை பார்க் தோட்ட ஆலயத்தன் வருடாந்த தேர்த்திருவிழா கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றது. இரவு ஆலயத்திலிருந்து புறப்பட்ட தேர் இந்தியப் பிரதமர் மோடியின் வருகையால் கந்நப்பளை நகருக்கு 11ஆம் திகதி மதியமே வந்து சேர்ந்தது. இந்நிலையில் மது, போதை வஸ்துக்களை பாவித்து சிலர் திருவிழாவில் குழப்பம் விளைவிக்க மக்கள் சிதறி ஓடியுள்ளனர். இந்த குழப்பத்தில் மாமியுடன் நின்றிருந்த குறித்த சிறுமி காணமால் போக, இரவு முழுதும் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. மறுநாள் மாலை கந்தப்பளை காட்டுப்பகுதிக்கு அருகிலுள்ள குடியிறுப்பொன்றின் தோட்டத்தில் வாழைப் புதறுக்குள் இருந்து மீட்கப்பட்டாள்.
இச்சம்பவத்துடன் தொடர்புடயவர்கள் என்ற சந்தேகத்தின் பேரின் மூவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இன்னும் இருவரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்ற வகையில் மீனாட்சி அம்மாள் மலையக மகளிர் அமைப்பு மும்முரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.
இவ்வமைப்பினருக்கு சிறுமி அளித்த வாக்குமூலத்தின் படி ்கடந்த 11ஆம் திகதி பி.ப 5 மணியளவில் கந்தப்பளை நகரின் தேர் திருவிழா இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் சிலருக்கு மத்தியில் நடைபெற்ற கலகலப்பில் மக்கள் சிதறி ஓடினர். நானும் பயத்தில் என் மாமியின் கையை விட்டு ஓடினேன். யாரோ என் கைகளை பின்னால் வலைத்து துணியால் வாயை மூடி முச்சக்கர வண்டியில் ஏற்றினார்கள். கொன்கோர்டியா காட்டுப்பகுதிக்குள் அழைத்து செல்லும் போதுதான் என் வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கும் கிளி என்றழைக்கப்படும் கமலதாசன்தான் என்னைத் தூக்கி வந்தது என்பதை அறிந்தேன். கமலதாசன் அவருடைய நண்பர்கள் இருவர், ஆட்டோ சாரதி சேர்ந்து காட்டுப்பகுதியில் என் கைகளை மட்டும் அவிழ்த்துவிட்டு ஓடவிட்டார்கள். பயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. வாய் கட்டியவாறே ஓடினேன். அவர்கள் இடைக்கிடை வழிமறித்து அடித்தார்கள். உடைகளை கிழித்தார்கள். துஷ்பிரயோகம் செய்தார்கள். என்னால் எதிர்த்து போராட முடியவில்லை. இருட்டும் வரை காட்டிலேயே வைத்திருந்து இருட்டியதும் ஒரு பள்ளத்தில் இழுத்துச் சென்றார்கள். அங்கு யாரும் இல்லாத வீடொன்றில் என்னை அடைத்து வ்தைதார்கள். சிறிது நேரத்தில் ஒரு பெண் வந்து என்னை அடித்து ஒரு உடையை கொடுத்து உடுத்த சொன்னாள்.
பிறகு கிளி என்பவர் என் கழுத்தில் கத்தியை வைத்து யாரிடமும் சொன்னால் கொன்று விடுவேன் மிரட்டிவிட்டு விடியும் வரை என் அருகிலேயே உட்கார்ந்திருந்தார். விடிந்ததும் அந்த குடிசை வீட்டுக்கு அருகிலுள்ள வாழைமரப் புதருக்குள் மண்டியிடச் செய்துவிட்டுச் சென்றார்கள். பொலிஸாருடன் அம்மா, அப்பா வரும் வரை மாலை 4 மணி வரை அங்கேயே கிடந்தேன். இதற்குப் பதில் அவர்கள் என்னை அங்கேயே கொன்றிருக்கலாம்ீீ எனத் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுமி சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள். சிறுமியோடு சேர்த்து நான்கு பெண் பிள்ளைகள். மூத்தவள் திருமணம் முடித்துச் சென்றுவிட குறித்த பிள்ளை பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திவிட்டு கொழும்பில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். திருவிழாவுக்காக சொந்த ஊருக்குச் சென்ற இச் சிறுமிக்கே இந்த பரிதாப நிலை.
சம்பவ தினதன்று பி.ப. 3.30 மணியளவில் தேர் பவணி முடியும் முன் என் தம்பி மணைவியிடம் மகளை விட்டுவிட்டு கடைசி பிள்ளைகள் இருவரையும் கூட்டி கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். ஒரு 5 மணி இருக்கும் மைத்துணி வந்து மகளை காணவில்லை என்றாள். சுற்று வட்டாரமெல்லாம் தேடினோம். எங்கும் மகளைக் காணாததால் கந்தப்பளை பொலிஸுக்கு ஓடினோம். இரவு முழுதும் தேடிப்பாருங்கள் கிடைக்காவிட்டால் காலையில் வாருங்கள். முறைப்பாடு பதிவு செய்யலாம் என்றார்கள். நாங்களும் இரவு 2 மணி வரை தேடியும் கிடைக்காததால் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். மாலை 3 மணியளவில் என் கணவருக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. ்உங்களது மகள் கொங்கோடியாவில் திருட்டு சங்கர் என்பவனின் தோட்டத்து வாழைமர தூரில் கிடக்கின்றால் முடிந்தால் காப்பாற்றிகொள்ளுங்கள்ீீ என்றார்கள். பதரி அடித்துக்கொண்டு பொலிஸுக்குச் சென்றோம். பொலிஸாரோடு அங்கு சென்று பார்க்கையில் ஒருவன் குடி மயக்கத்தில் வாசலில் விழுந்து கிடந்தான். பக்கத்தில் புறா அனத்துவது போல் சத்தம் கேட்டது. ஐயோ... என் மகள்தான் என கத்திக்கொண்டு என் கணவர் மகளை தூக்கி நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம்ீீ என தனக்குத் தெரிந்தவற்றை கண்ணீரில் கரைக்கிறார் சிறுமியின் தாய்.
இவ்விடயத்தில் பொலிஸார் முன்மாதிரியாக முதல்நாளே முறைப்பாடை ஏற்று தேடியிருந்தால் இப்படியொரு சம்பவத்தைத் தடுத்திருக்கலாம். அல்லது குற்றவாளிகள் அப்போதே கைது செய்யப்பட்டிருக்கலாம். பொலிஸாரின் அசமந்தம் 16 வயது சிறுமியின் வாழ்க்கையையே சீரழித்திருக்கிறது. உயிர் பிரிந்தால் மட்டுமே கொதித்து எழும் எம் சமூகம் இப்படியான சம்பவங்களின் போது மௌனித்திருப்பதுதான் குற்றவாளிகளுக்கு சாதகமாகின்றது. அதேநேரம் சட்டமும் சாட்சியங்களை மட்டுமே நம்பியிருப்பதால் இப்படிப்பட்ட கயவர்கள் வெகு விரைவிலேயே வெளியில் வந்து சுதந்திரமாக நடமாட நேரிடுகின்றது. ஆக இவ்விடயத்தில் சட்டமும் சமூகமும் பொறுப்புணர்வோடு செயற்பட்டு துரித கதியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும்.